பசுக்கள், மயில்களுக்கு உணவளித்த பிரதமர் மோடி

0
21

பசுக்கள், மயில்​களுக்கு உணவளிக்​கும் வீடியோவை பிரதமர் நேற்று சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்​டார். இந்த வீடியோ வைரலாக பரவி வரு​கிறது.

பிரதமர் நரேந்​திர மோடி​யின் அதி​காரப்​பூர்வ இல்​லம், டெல்​லி​யின் லோக் கல்​யாண் மார்க் பகு​தி​யில் அமைந்​துள்​ளது. அங்கு தின​மும் அதி​காலை​யில் பிரதமர் நரேந்​திர மோடி நடைப்ப​யிற்சி மேற்​கொள்​வது வழக்​கம். அப்​போது அவர் பசுக்​கள், மயில்​களுக்கு உணவளிப்​பதை வழக்​க​மாக கொண்​டிருக்​கிறார்.

பிரதமரின் இல்​லத்​தில் பராமரிக்​கப்​படும் ஆந்​தி​ரா​வின் பாரம்பரியமிக்க புங்​க​னூர் பசுக்​கள் மற்​றும் மயில்​களுக்கு சுதந்​திர தினத்​தன்​றும் அவர் உணவு அளித்​தார். இந்த வீடியோவை அவர் நேற்று தனது இன்ஸ்​டாகி​ராம் பக்​கத்​தில் பகிர்ந்​தார்.

“காலைப் பொழு​தில் எனது நண்​பர்​களுக்கு (பசுக்​கள், மயில்​கள்) உணவு அளிப்​பது அன்​றாட வழக்​கம். ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்​திர தின விழாவுக்​காக செங்​கோட்​டை​யில் தேசிய கொடியேற்ற நான் முன்​கூட்​டியே புறப்​பட்​டேன். இதை எப்​படியோ உணர்ந்து கொண்ட எனது நண்​பர்​கள் என்னை சூழ்ந்து கொண்​டன. எப்​போதும்​போல இது​வும் ஒரு சிறப்​பான தருணம்” என்று தெரிவித்துள்​ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here