மனைவியை பிரிந்தார் பிரதீப் ஆண்டனி

0
27

‘பிக்​பாஸ் சீசன் 7’ மூலம் பிரபல​மானவர் நடிகர் பிரதீப் ஆண்​டனி. இவர்​ ‘வாழ்’, ‘டாடா’ உள்பட சில படங்​களில் நடித்​துள்​ளார். இவர் தனது காதலி பூஜாவை கடந்த 2024-ம் ஆண்டு திரு​மணம் செய்​து​கொண்​டார். இவர்​களுக்கு ஆண் குழந்தை உள்​ளது. இந்​நிலை​யில் தனது மனை​வி, மகனைப் பிரிந்​து​விட்​ட​தாக அவர் சமூக வலை​தளத்​தில் பதிவு ஒன்றை வெளி​யிட்​டுள்​ளார்.

அதில் அவர், “நான் தவறான நபரைத் திரு​மணம் செய்​து​விட்​டேன் என்று நினைக்​கிறேன். திரு​மண​மான​தில் இருந்து மோச​மான மனித​னாக மாறிக்​கொண்​டிருந்​தேன்.

ஒவ்​வொரு நாளும் நான் ஒரு​வருடைய வாழ்க்​கையை அழித்​துக்​கொண்​டிருக்​கிறேன் என்ற உணர்வு இருந்​தது. இன்​னொரு​வருடன் இணைந்து எப்​படி மகிழ்ச்​சி​யாக வாழ்​வது என்று எனக்கு உண்​மை​யிலேயே தெரிய​வில்​லை.

இப்​போது என் திருமண வாழ்க்​கை​யில் இருந்து வில​கிச் செல்ல முடிவு செய்​திருக்​கிறேன். இந்த உறவில் என்​னால் மூச்​சுக்​கூட விட முடிய​வில்​லை. குழந்​தை, அதன் அம்​மாவுடன் இருப்​பதே நல்​லது என்று நினைத்​தேன். நான் எப்​போதும் அனாதை​யாக வாழ​வேண்​டும் என்​கிற எனது சாபத்தை ஏற்​றுக்​கொண்​டு​விட்​டேன்​” எனக்​ கூறி​யுள்​ளார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here