கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட இடத்தில் போலீஸார் விசாரணை

0
12

கர்நாடக மாநிலம் சாம்​ராஜநகர் மாவட்​டம் ஹனூர் அரு​கே​யுள்ள காவிரி வனவிலங்கு சரணாலய பகு​தி​யில் கடந்த 15-ம் தேதி அதி​காலை​யில் மானை வேட்​டைதோணி​சாமி (50), ஜான்​ரோஸ் பீட்​டர் (42), லாசர் குமார் (33) ஆகிய மூவரும் அம்​மாநில வனத்​துறை​யின​ரால் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். இந்த சம்​பவம் அங்கு ​யாடிய​தாக அந்​பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யதை தொடர்ந்​து, வனத்​துறை அலு​வல​கங்​கள் சூறை​யாடப்​பட்​டன.

கர்​நாடக வனப்​பகு​தி​யில் சுட்​டுக்​கொல்​லப்​பட்ட‌ 3 தமிழர்​களின் உடல்​களும் இறுதி திருப்​பலிக்கு பின்​னர், அவர்​களின் சொந்த கிராமங்​களில் நேற்று அடக்​கம் செய்​யப்​பட்​டது. இதனிடையே 3 பேரும் சுட்​டுக்​கொல்​லப்​பட்ட ஷாக்யா வனப்​பகு​தி​யில் கொள்ளேகால் துணை ஆணை​யர் தினேஷ் குமார் மீனா தலைமை​யில் போலீ​ஸாரும், வனத்​துறை அதி​காரி​களும் நேற்று ஆய்வு மேற்​கொண்​டனர். அங்கு சிதறி கிடந்த காலணி​கள், பாறைகளுக்கு இடை​யில் இருந்த தக்​காளி, வெங்​கா​யம் போன்றவற்றை சேகரித்​தனர்.

அரசு நடத்​திய என்​க​வுண்ட்​டர்.. பாஜக குற்​றச்​சாட்டு

கர்​நாடக சட்​டப்​பேர​வை​யில் எதிர்க்​கட்சி தலை​வர் ஆர்​.அசோகா பேசுகை​யில், “ஹனூர் வனப்​பகு​தி​யில் 3 பேரை சுட்டு கொன்றிருக்​கிறார்​கள். இது அரசே நடத்​திய என்​க​வுண்ட்​டர். அப்பாவி விவ​சா​யிகளை வேட்​டைக்​காரர்​கள் என பொய் சொல்லி கொலை செய்​திருக்​கிறார்​கள்.

கர்​நாட​கா​வில் இதற்​காக மக்​கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக முதல்​வர் விஜய் இந்த கொலையை கண்​டித்​திருக்​கிறார். இந்த கொலை​யால் கர்​நாட​காவில் வாழும் லட்​சக்​கணக்​கான தமிழர்​களுக்கு அச்​சம்​ ஏற்பட்டிருக்​கிறது. அவர்​களுக்​கு உரிய நீதியை அரசு வழங்​க வேண்டும்​” என ஆவேச​மாக பேசி​னார்​.

இதற்கு துணை முதல்வர் பரமேஷ்வர், ”இதனை அரசு செய்த கொலை என சொல்லக்கூடாது. விசாரணை முடிந்த பின்னர், விரிவாக விவாதிக்கப்படும்”என்றார். இதனை ஏற்க மறுத்து பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here