கர்நாடக மாநிலம் சாம்ராஜநகர் மாவட்டம் ஹனூர் அருகேயுள்ள காவிரி வனவிலங்கு சரணாலய பகுதியில் கடந்த 15-ம் தேதி அதிகாலையில் மானை வேட்டைதோணிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), லாசர் குமார் (33) ஆகிய மூவரும் அம்மாநில வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு யாடியதாக அந்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, வனத்துறை அலுவலகங்கள் சூறையாடப்பட்டன.
கர்நாடக வனப்பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களின் உடல்களும் இறுதி திருப்பலிக்கு பின்னர், அவர்களின் சொந்த கிராமங்களில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே 3 பேரும் சுட்டுக்கொல்லப்பட்ட ஷாக்யா வனப்பகுதியில் கொள்ளேகால் துணை ஆணையர் தினேஷ் குமார் மீனா தலைமையில் போலீஸாரும், வனத்துறை அதிகாரிகளும் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு சிதறி கிடந்த காலணிகள், பாறைகளுக்கு இடையில் இருந்த தக்காளி, வெங்காயம் போன்றவற்றை சேகரித்தனர்.
அரசு நடத்திய என்கவுண்ட்டர்.. பாஜக குற்றச்சாட்டு
கர்நாடக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா பேசுகையில், “ஹனூர் வனப்பகுதியில் 3 பேரை சுட்டு கொன்றிருக்கிறார்கள். இது அரசே நடத்திய என்கவுண்ட்டர். அப்பாவி விவசாயிகளை வேட்டைக்காரர்கள் என பொய் சொல்லி கொலை செய்திருக்கிறார்கள்.
கர்நாடகாவில் இதற்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக முதல்வர் விஜய் இந்த கொலையை கண்டித்திருக்கிறார். இந்த கொலையால் கர்நாடகாவில் வாழும் லட்சக்கணக்கான தமிழர்களுக்கு அச்சம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கு உரிய நீதியை அரசு வழங்க வேண்டும்” என ஆவேசமாக பேசினார்.
இதற்கு துணை முதல்வர் பரமேஷ்வர், ”இதனை அரசு செய்த கொலை என சொல்லக்கூடாது. விசாரணை முடிந்த பின்னர், விரிவாக விவாதிக்கப்படும்”என்றார். இதனை ஏற்க மறுத்து பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
