அசாமில் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம் செய்தால் அரசு ஊழியர்களின் சம்பளம் பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறும்போது, ‘‘அசாம் அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஓர் எச்சரிக்கையை விடுக்கிறேன்.
அரசு ஊழியர்கள் யாராவது மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் மற்றொரு பெண்ணுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் திருமணம் செய்துகொண்டால், அவர்களுடைய சம்பளத்தில் இருந்து 20 சதவீதத் தொகை பிடித்தம் செய்யப்படும். அந்தத் தொகை, சம்மந்தப்பட்ட அரசு ஊழியரின் முதல் மனைவியின் வங்கிக் கணக்கில் அரசு சார்பில் செலுத்தப்படும்’’ என்றார்.
