டெல்லியில் ரூ.33,500 கோடி மதிப்பில் திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

0
88

டெல்லி யூனியன் பிரதேசத்​தில் ரூ.33,500 கோடி மதிப்​பிலான திட்​டங்​களை, பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார். சில திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார்.

தலைநகர் டெல்​லி​யில் சிவப்​பு, மஞ்​சள், நீலம், பச்​சை, ஊதா, இளஞ்​சிவப்பு (பிங்க்), மெஜந்தா உள்​ளிட்ட பெயர்​களில் 10-க்​கும் மேற்​பட்ட வழித் தடங்​களில் மெட்ரோ ரயில் இயக்​கப்​படு​கிறது. இதில் பிங்க் மற்​றும் மெஜந்தா வழித்​ தடங்​கள் இணைக்​கப்​பட்டு நாட்​டின் முதல் வட்ட மெட்ரோ பாதை (ரிங் மெட்​ரோ) அமைக்கப்பட்​டுள்​ளது.

அதன்​படி பிங்க் வழித்​தடத்​தில் 12.3 கி.மீ. நீள மஜ்லிஸ் பார்க் – உஜ்பூர் – பாபர்​பூர் பாதை, மெஜந்தா வழித் ​தடத்​தில் 9.9 கி.மீ. நீள தீபாளி சவுக் – மஜ்லிஸ் பார்க் பாதையை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார். மேலும் 3 புதிய மெட்ரோ வழித் தடங்களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார்.

டெல்லி சரோஜினி நகர், நேதாஜி நகர் உள்​ளிட்ட பகு​தி​களில் அரசு ஊழியர்​களுக்​காக ரூ.15,200 கோடி மதிப்​பில் 9,350 அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் கட்​டப்​பட்​டுள்​ளன. இந்த வீடு​களின் சாவி​களை பயனாளி​களிடம் பிரதமர் மோடி வழங்​கி​னார். ஒட்​டுமொத்​த​மாக ரூ.33,500 கோடி மதிப்​பிலான திட்​டங்​களை அவர் தொடங்கி வைத்தார், சில திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார்.

டெல்லி விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: இந்​திய பெண்​கள் அனை​வருக்​கும் மகளிர் தின வாழ்த்​துகளைத் தெரிவித்துக் கொள்​கிறேன். அரசி​யல், ஆட்சி நிர்​வாகம், அறிவியல், விளை​யாட்​டு, சமூக சேவை என அனைத்து துறைகளிலும் இந்​தி​யப் பெண்​கள் பல்​வேறு சாதனை​களைப் படைத்து வருகின்றனர். டெல்​லியை சர்​வ​தேச நகர​மாக உருவாக்க வேண்டும். இதற்​காக டெல்​லி​யின் உள்​கட்​டமைப்​பு​கள் தொடர்ந்து மேம்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன.

இதன் ஒரு பகு​தி​யாக டெல்லி மெட்ரோ சேவை, 375 கி.மீ. ஆக விரிவுபடுத்​தப்​ பட்​டுள்​ளது. தற்​போது நாட்​டின் முதல் ரிங் மெட்ரோ சேவை தொடங்​கப்​பட்​டிருக்​கிறது. டெல்​லி​யில் நமோ பாரத் ரயில் சேவை தொடங்​கப்​பட்​டுள்​ளது. கடந்த ஆண்​டில் மட்டும் டெல்​லி​யில் 1,800 மின்​சார பஸ்​கள் அறி​முகம் செய்யப்பட்டன. டெல்லி சுற்​று​வட்ட சாலை​யால் போக்​கு​வரத்து நெரிசல் குறைந்​துள்​ளது. யமுனை நதியை தூய்​மைப்​படுத்​தும் பணி தீவிரப்​படுத்​தப்​பட்டு உள்​ளது. இரட்டை இன்​ஜின் அரசால் டெல்​லி​யில் வளர்ச்சி திட்​டப் பணி​கள் விரைவு பெற்​றுள்​ளன.

மத்​திய அரசின் பல்​வேறு திட்​டங்​களால் நாடு முழு​வதும் ஏழைகள், விவ​சா​யிகள், தொழிலா​ளர்​கள் பலன் அடைந்து வருகின்​றனர். சுமார் 2 லட்​சம் நடை​பாதை வியா​பாரி​களுக்கு கடன் உதவி வழங்​கப்​பட்​டுள்​ளது. நாடு முழு​வதும் சுய உதவிக் குழுக்​களைச் சேர்ந்த 10 கோடி பெண்​களுக்கு பல்​வேறு நலத்திட்டங்​கள் அமல் செய்​யப்​பட்​டுள்​ளன. நாடு முழு​வதும் 3 கோடி லட்​சா​திபதி பெண்​களை உரு​வாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்​ளது. புதிய இந்​தி​யாவை உரு​வாக்கி வருகிறோம். நமது நாட்டை முன்​னேற்ற பாதை​யில் அழைத்​துச் செல்ல அனை​வரும் ஒன்​றிணைந்து உழைக்​க வேண்​டும்​. இவ்வாறு அவர் பேசி​னார்​.

மே.வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: டெல்லி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மேற்கு வங்கத்தில் நடந்த பழங்குடியினர் மாநாட்டில் பங்கேற்க சென்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அம்மாநில அரசு அவமதித்து உள்ளது. இதன் மூலம் நாட்டின் அரசியலமைப்பு சட்டம் அவமதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு பெண்களும் அவமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆணவத்துடன் செயல்படுகின்றனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள். மேற்கு வங்கத்தில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here