விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்த சதி: குஜராத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி கைது

0
31

 குஜராத்தில் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதியை தீவிரவாத எதிர்ப்புப் படையினர் கைது செய்தனர்.

குஜராத்தின் வதோதராவில் உள்ள இந்திய விமானப் படைத்தளம் மீது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஒருவர் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியுள்ளதாக அம்மாநிலத்தின் தீவிரவாத எதிர்ப்புப் படைக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, தீவிரவாத எதிர்ப்புப் படையினர் வதோதரா முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த முகமது இஸ்லாம் கபிருதீன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்த அவரிடம் இருந்து ஏகே-47 ரகத் துப்பாக்கி, 23 தோட்டாக்கள், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் கொடி, செல்போன்கள் மற்றும் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப் பட்டன.

இதன் மூலம் குஜராத்தில் நடக்கவிருந்த மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் சதி திட்டம் வெற்றிகரமாக முறிய டிக்கப்பட்டது. இது குறித்து குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படையின் டிஐஜி சுனில் ஜோஷி கூறுகையில், “கபிருதீன் குஜராத்தில் தாக்குதலை நடத்திவிட்டு பின்னர் பாகிஸ் தானுக்குச் சென்று ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பில் இணைந்து, ‘தியாக மரணம்’ அடைவதை இறுதி நோக்கமாகக் கொண்டிருந்தார். அவர் மீது உபா சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here