ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சிறார், இளைஞர்களை சுட்டுக் கொல்லும் பாகிஸ்தான் ராணுவம்

0
9

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விலைவாசி உயர்வை கண்டித்து கடந்த ஏப்ரலில் மிகப் பெரிய போராட்டம் வெடித்தது. அப்போது பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல்களை நடத்தினர். தற்போது ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 53 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஜூலை 27, ஆக.2-ம் தேதிகளில் இரு கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன.

வரும் 10-ம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 53 தொகுதிகளில் 12 தொகுதிகள் காஷ்மீரில் இருந்து ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு இடம் பெயர்ந்த அகதிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொடூர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து, ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ராவல்கோட் பகுதியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூறியதாவது: போராட்டங்களில் ஈடுபடும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்படுகிறது. 15, 16 வயதுடைய சிறார்களையும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஈவு, இரக்கமின்றி சுட்டுக் கொன்று வருகின்றனர்.

ராணுவ தாக்குதலில் உயிரிழப்போரில் பெரும்பாலானோர் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். இளைஞர்களை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்படுகிறது.

ராணுவ வீரர்களின் துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் எங்களிடம் இல்லை. ராணுவத்தின் கட்டுப்பாடுகளால் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here