நாகர்கோவிலில் கார் டிரைவரை தாக்கி பணம் பறித்த பெயிண்டர் கைது

0
225

நாகர்கோவில் வடசேரி அருகே கிருஷ்ணன் கோவில் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் சிவலிங்கம் (42), வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, புதுகுடியிருப்பு சுப்பையாகுளம் பகுதியில் பாலமுருகன் (28) என்பவர் வழிமறித்து பணம் கேட்டுள்ளார். சிவலிங்கம் பணம் தர மறுத்ததால், அவரைத் தாக்கி சட்டைப் பையில் இருந்த பணத்தைப் பறித்துக்கொண்டு பாலமுருகன் தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து சிவலிங்கம் அளித்த புகாரின் பேரில் வடசேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனைக் கைது செய்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here