பத்மநாபபுரம்:  2 தொழிலாளிகளுக்கு தலா 5 ஆண்டு சிறை

0
77

குலசேகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சன் (44). இவர் கடந்த 21-01-2010 இரவில் ராஜீவ் என்பவருடன் பைக்கில் சென்றனர். அப்போது மன்னாரங்கோடு காலனியில் ஒரு இறப்புவீட்டிற்கு வந்த தமிழரசன், விமல்காந்த், ரமேஷ் ஆகியோர் தகராறு செய்தனர். ஜெய்சன் சண்டையை விலக்கிவிட்டதால் ஆத்திரமடைந்த கும்பல் இருவரையும் குத்தியுள்ளனர். இந்த வழக்கு பத்மநாபபுரம் சப்கோர்ட்டில் நடந்தது. நேற்று குற்றம் சுமத்தப்பட்ட மூன்று பேரில் ரமேஷ் இறந்ததால் தமிழரசன், விமல்காந்த் ஆகியோருக்கு தலா 5 ஆண்டு கடுங்காவல், தலா 5 ஆயிரம் அபராதம் வழங்கி தீர்ப்பு கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here