அரசுப் பேருந்துகளில் பயணிகள் மட்டுமே முன்பதிவு டிக்கெட்களை ரத்து செய்ய முடியும்

0
127
நாகர்கோவில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகர்கோவில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவமனை எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் முறையாக நின்று செல்லாததால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் முதியவர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி தொடர் விடு​முறை முடிந்து சென்னை திரும்​பும் பயணி​களுக்​காக கிளாம்​பாக்​கம் பேருந்து முனை​யம் மற்​றும் கோயம்​பேடு பேருந்து நிலை​யத்​தில் மாநகரப் போக்​கு​வரத்​துக் கழகம் சார்​பில் சென்​னை​யின் பல்​வேறு பகு​தி​களுக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்ள இணைப்பு பேருந்​துகள் இயக்​கத்தை போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் ஆ.விஜய் தமிழன் பார்த்​திபன் நேற்று காலை​யில் ஆய்வு செய்​து, பொது மக்​களிடம் பேருந்​துகள் இயக்​கம் குறித்து கேட்​டறிந்​தார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் கூறிய​தாவது: அரசுப் போக்​கு​வரத்​துக் கழகங்​கள் சார்​பில், சென்​னை​யில் இருந்து தமிழகத்​தின் பல்​வேறு பகு​தி​களுக்​கு, கடந்த 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை கிளாம்​பாக்​கம் பேருந்து முனை​யத்​தில் இருந்து வழக்​க​மாக இயக்​கப்​படும் 3,297 பேருந்​துகளு​டன், 2,915 சிறப்​புப் பேருந்​துகள் என மொத்​தம் 6,212 பேருந்​துகள் இயக்​கப்​பட்​டன.

இவற்​றில் 2,48,270 பயணி​கள் பயணம் மேற்​கொண்​டனர். விநாயகர் சதுர்த்தி தொடர் விடு​முறை முடிந்து சென்​னைக்கு வரும் பயணி​களின் வசதிக்​காக, திங்​கள்​கிழமை (14-ம் தேதி) வழக்​க​மாக இயக்​கப்​படும் 1,099 பேருந்​துகளு​டன், 2,240 சிறப்பு பேருந்​துகள் என 3,339 பேருந்​துகள் இயக்கப்பட்டன.

அரசுப் பேருந்​துகளில் முன்​ப​திவு செய்த டிக்​கெட்​கள் தானாக ரத்​தாவது இல்​லை. முன்​ப​திவு செய்​தவர்​கள் தான் ரத்து செய்ய முடி​யும், அவர்​களின் எண்​ணுக்கு வரும் ஓடிபியை உள்​ளீடு செய்​தால் மட்​டுமே ரத்து செய்ய முடி​யும். சிலர் திட்​ட​மிட்டே பொய் பரப்​புரை செய்து வரு​கின்​றனர்.

ஆம்னி பேருந்​துகளில் முன்​ப​திவு டிக்​கெட் ரத்து செய்​யப்​பட்​ட​தாக​வும், கூடு​தல் கட்​ட​ணம் வசூலிப்​ப​தாக​வும் புகார்​கள் வந்​தன. அவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் விதி​மீறல்​களில் ஈடு​படு​வோரின் உரிமம் ரத்து செய்​யப்​படும் என எச்​சரிக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அமைச்​சர் கூறி​னார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here