
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஒரு நாள் சுற்றுலா!
குமரி மாவட்டத்தில் 3 சிறப்புப் பயிற்சி மையங்களில் பயிலும் 32 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒரு நாள் சுற்றுலாவை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி கடற்கரை, விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, முட்டம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை குழந்தைகள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சுற்றுலாவில் 11 சிறப்பாசிரியர்கள், 15 பராமரிப்பாளர்களும் உடன் செல்கின்றனர்.













