கனடா எழுத்தாளர் ஆன் கார்சனுக்கு இலக்​கி​யத்​துக்​கான நோபல் பரிசு

0
25

 கனடா எழுத்தாளர் ஆன் கார்​சனுக்கு (76) இலக்கியத்​துக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. உலகம் முழு​வதும் இருந்து 200 எழுத்​தாளர்​களின் பெயர்​கள் இலக்கிய நோபல் பரிசுக்கு பரிந்​துரை செய்​யப்​பட்​டன. இதில் இருந்து 20 பேரின் பெயர்​கள் இறு​திச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டன. அவர்​களில் கனடாவை சேர்ந்த எழுத்​தாளர் ஆன்கார்​சனுக்கு நேற்று இலக்​கி​யத்​துக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்​டது.

இதுகுறித்து நோபல் பரிசு கமிட்டி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கனடா கவிஞர், எழுத்​தாளர் ஆன் கார்​சனின் எழுத்​துகள் புது​மை, நகைச்​சுவை நிறைந்​தவை​யாக உள்​ளன. தற்​கால இலக்​கி​யத்​தில் அவர் புதிய பாணி​களை அறி​முகம் செய்​துள்​ளார். குறிப்​பாக கவிதை, மொழிபெயர்ப்​பில் அவரது பங்​களிப்​பு​கள் முக்​கி​யத்​து​வம் வாய்ந்​தவை​யாக உள்​ளன. அவரது படைப்​பு​கள் வாழ்​வியல் தத்​து​வங்​களை தெளி​வாக விளக்​கு​கின்​றன.

பழங்​கால கிரேக்க, லத்​தீன் இலக்​கி​யங்​களை அவர் புதுமை பாணி​யில் உலகத்​துக்கு சமர்ப்​பித்து உள்​ளார். அவரது படைப்புகளில் கவிதை, கதை, நாடக இலக்​கி​யங்​கள் ஒன்றிணைந்து காணப்​படு​கின்​றன. பல்​வேறு முக்​கிய வார்த்தைகள் எவ்​வாறு தோன்​றின, அவற்​றின் அர்த்​தங்​கள் என்ன என்​பதை அவர் எடுத்​துரைத்து உள்​ளார். இவ்​வாறு அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.

கடந்த 1998-ம் ஆண்​டில் “ஆட்​டோபயோகி​ராபி ஆப் ரெட்” என்ற நாவலை எழுத்​தாளர் ஆன் கார்​சன் வெளி​யிட்​டார். இந்த நாவல் அவரது மிகச் சிறந்த படைப்​பாக போற்​றப்​படு​கிறது. கிரேக்கத்தின் 10 பண்​டைய கால தொகுப்​பு​களை அவர் மொழி​மாற்​றம் செய்​திருக்​கிறார். 20-க்​கும் மேற்​பட்ட கவிதை தொகுப்புகளை வெளி​யிட்டு உள்​ளார். அவரது ஒட்​டுமொத்த படைப்​புகளுக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here