நித்திரவிளை பகுதியைச் சேர்ந்த 22 வயது அபி, சென்னையில் வேலை பார்த்துவிட்டு தற்போது சொந்த ஊரில் உள்ளார். நேற்று மதியம் நண்பர்களுடன் கணபதியான்கடவு ஆற்றின் கரையில் பேசிக்கொண்டிருந்தபோது, ஆற்றில் குதித்து நீந்த முயன்றார். ஆற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால், அபி நீந்த முடியாமல் அடித்துச் செல்லப்பட்டார். தகவல் அறிந்ததும் கொல்லங்கோடு தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் இன்று இரண்டாம் நாளாக ஆற்றில் அபியைத் தேடி வருகின்றனர்.















