Home விளையாட்டு செய்திகள் டெஸ்ட் தொடரை வென்றது நியூஸிலாந்து அணி​

டெஸ்ட் தொடரை வென்றது நியூஸிலாந்து அணி​

0

இங்கிலாந்து – நியூஸிலாந்து அணி​கள் இடையிலான கடைசி மற்​றும் 3-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி நாட்டிங்காமில் நடை​பெற்று வந்​தது.

இதன் முதல் இன்​னிங்​ஸில் நியூஸிலாந்து 438 ரன்​களும், இங்கிலாந்து 354 ரன்​களும் எடுத்​தன. 84 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய நியூஸிலாந்து அணி 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 288 ரன்​கள் எடுத்த நிலை​யில் டிக்​ளேர் செய்​தது. டேரில் மிட்​செல் 100 ரன்​களும், ரச்​சின் ரவீந்​திரா 94 ரன்​களும் விளாசினர்.

இதையடுத்து 373 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி நேற்​றைய கடைசி நாள் ஆட்​டத்​தில் 51.2 ஓவர்​களில் 212 ரன்களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஜேமி ஸ்மித் 60 ரன்கள் சேர்த்தார். நியூஸிலாந்து அணி தரப்​பில் ஜாக் போக்ஸ் 3 விக்கெட்களை வீழ்த்​தி​னார். வில் ரூக், மிட்​செல் சாண்ட்​னர் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர். 160 ரன்​கள் வித்தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என கைப்​பற்றி கோப்​பையை வென்​றது.

முதல் போட்​டி​யில் இங்​கிலாந்து அணி 115 ரன்​கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்​றிருந்​தது. 2-வது டெஸ்​டில் நியூஸிலாந்து அணி 253 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி கண்டிருந்​தது. ஆட்ட நாயக​னாக டேரில் மிட்​செல் தேர்​வா​னார். தொடர் நாயக​னாக இங்​கிலாந்​தின் ஜோப்ரா ஆர்ச்​சரும் (25 ரன்கள், 11 விக்​கெட்​கள்), நியூஸிலாந்​தின் நேதன் ஸ்மித்​தும் (68 ரன்​கள், 16 விக்​கெட்​கள்) தேர்வு செய்​யப்​பட்​டனர்​. இந்த போட்டியுடன் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version