தமிழில், வினய் நடித்த ‘மிரட்டல்’ படத்தில் நாயகியாக நடித்தவர் ஷர்மிளா மந்த்ரே. கன்னடத்தில் சில படங்களில் நடித்துள்ள இவர், விமல் நடித்த ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’, ‘சண்டக்காரி’, தினேஷின் ‘நானும் சிங்கிள்தான்’ ஆகிய தமிழ்ப் படங்களைத் தயாரித்துள்ளார்.
இவருக்கும் பிரபல தமிழ்ப் பட தயாரிப்பாளர் பேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சுந்தரத்துக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற இந்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
திருமணத் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று ஷர்மிளா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குக் கன்னட, தமிழ்த் திரைப்படத் துறையினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தயாரிப்பாளர் சுதன் சுந்தரம், விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’, ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பார்க்கிங்’ உள்பட பல படங்களைத் தயாரித்துள்ளார். இப்போது, மிஸ்டர் பாரத், பென்ஸ் உள்பட சில படங்களைத் தயாரித்து வருகிறார்.
