தமிழக மின் வாரியம் தனக்கு சொந்தமான அனல், எரிவாயு மின் நிலையங்கள், சூரியசக்தி மற்றும் காற்றாலைகள் மூலமாக மின் உற்பத்தி செய்து தேவையை சமாளிக்கும்.
இதுதவிர மத்திய அரசின் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து கிடைக்கும் தமிழகத்துக்கான பங்கில் இருந்தும் பெறப்படுகிறது.
தேவை அதிகரிக்கும் போது வெளிசந்தைகளில் இருந்து நீண்ட, நடுத்தர, குறுகிய கால மின் கொள்முதல் ஒப்பந்தம் வாயிலாக மின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
இதனிடையே மின் வாரியம் தரப்பில் குறுகிய கால மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதிக விலை கோரியதால் அவை ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், நடுத்தர காலமின் கொள்முதல் ஒப்பந்த முறையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் 5 ஆண்டுகளுக்கு நாடு முழுவதும் மற்றும் மாநிலத்துக்குள் உள்ள தனியார் உற்பத்தியாளர்களிடமி ருந்து 3,000 மெ.வா மின்சாரம் கொள்முதல் செய்ய மின்வாரியம் டெண்டர் கோரியுள்ளது.














