பெண் காவலர்களின் கைபேசியை அமைச்சர் ஆய்வு செய்தது ஏன்? – பழனிசாமி கேள்வி

0
10

‘நள்ளிரவில் காவல் நிலையத்துக்குள் சென்ற அமைச்சர் காந்திராஜ், அங்கு பணியில் இருந்த பெண் காவலர்களின் கைபேசியை எந்த நோக்கத்தில் ஆய்வு செய்தார்?’ என, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: தவெக தலைவர் விஜய் வழியில் தொண்டர்கள், நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என்று அனைவருமே ‘ரீல்ஸ்’ மோகத்தில் ஆழ்ந்து, மக்களின் அடிப்படை பிரச்சினைகளை திசை திருப்பும் ஒரு மோசமான ஆட்சியை தவெக அரசு வழங்கிக்கொண்டிருக்கிறது. பொதுவாக காவல்நிலையம் என்பது சட்டத்தை பாதுகாக்குமிடம்.

அமைச்சர்கள் யாரும் காவல் நிலையங்களுக்கு நேரில் செய்து ஆய்வு செய்வதில்லை. ஆனால் கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ், தக்கோலம், அரக்கோணம் காவல் நிலையங்களை நள்ளிரவில் ஆய்வு செய்ததுடன், பணியில் இருந்த பெண் காவலர்களது செல்போனையும் ஆய்வு செய்ததாக ரீல்ஸ் எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

தவெக அமைச்சர் நள்ளிரவில் காவல் நிலையத்துக்கு ஆய்வுக்குச் சென்றாரா? அல்லது, யாரேனும் விசாரணை கைதியை சந்திக்கச் சென்றாரா? என்றும், காவல் நிலையத்திலுள்ளபெண் காவலர்களின் கைபேசியை எந்த நோக்கத்தில் ஆய்வு செய்தார்? என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதேபோல் திருச்செந்தூரில். லட்சக் கணக்கான பக்தர்கள் விரதமிருந்து கலந்துகொண்ட முருக பெருமானின் சூரசம்ஹார நிகழ்ச்சியில், ‘முதல்வருக்கு அரோகரா’, ‘அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா’ என்று முருகப் பெருமானுடன் முதல்வரையும், அமைச்சரையும், ஒப்பிட்டு பாடிய வேல்முருகன், புஷ்பவனம் குப்புசாமி போன்றவர்கள் பக்திமேடையை, அவர்களுக்கு பதவியளித்த கட்சித் தலைவரை துதிபாடும் மேடையாக மாற்றியதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஆகம விதிகளுக்கு மாறாக நடந்து கொண்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here