நேபாளம்: இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுமி 3 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

0
17

நே​பாளத்​தில் பெரு​வெள்​ளத்​தால் ஏற்​பட்ட இடிபாடுகளுக்​குள் சிக்​கிய 6 வயது சிறுமி 3 நாட்​களுக்கு பிறகு உயிருடன் மீட்​கப்​பட்​டாள்.

நேபாளத்​தில் கடந்த 26-ம் தேதி காலை பனிமலை உடைந்து ஏற்பட்ட பெரு​வெள்​ளத்​தில் சிக்​கிய​வர்​களை மீட்​கும் பணி தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில், ரசுவா மாவட்டத்​தில் உள்ள திமுரே கிராமத்​தில் கடந்த வெள்​ளிக்​கிழமை மாலை மீட்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்த ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த அதி​காரி​கள் மண்​ணுக்கு அடி​யில் இருந்து மெல்​லிய அழுகுரலைக் கேட்​டனர். அவர்​கள் விரைந்து செயல்​பட்​டுத் தோண்​டத் தொடங்​கினர்.

நீண்ட நேர போராட்​டத்​துக்கு பிறகு, அடர்த்​தி​யான சேறு மற்​றும் இடி​பாடு​களுக்கு அடி​யில் இருந்து ஒரு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டாள். 6 வயதான அந்த சிறுமி 3 நாட்​களாக இடிபாடுகளுக்​குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்​டிருந்​தாள். சிறுமியை உயிருடன் மீட்ட மீட்பு குழு​வினர் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, அவளை ஹெலி​காப்​டர் மூலம் காத்மாண்டுவில் உள்ள மருத்​து​வ​மனைக்​குக் கொண்டு சென்றனர். அங்கு அவள் தற்​போது சிறப்பு சிகிச்சை பெற்று வருகிறாள்.

பெரு​வெள்​ளத்​தால் ஏற்​பட்ட இடி​பாடு​களுக்​குள் சிக்​கிய 6 வயது சிறுமி 3 நாட்​களுக்கு பிறகு உயிருடன் மீட்​கப்​பட்ட சம்​பவம் உயிர் பிழைத்​தவர்​களைக் கண்​டு​பிடிப்​ப​தற்​காக அயராது உழைத்து வரும் மீட்​புக் குழு​வினருக்கு ஒரு​வித உத்​வேகத்​தை​யும், நம்பிக்கை​யை​யும் அளித்​துள்​ளது. இதனிடையே, சிறுமி மீட்கப்பட்​ட​போது எடுக்​கப்​பட்ட வீடியோ இணை​யத்​தில்​ வைரலாகி வருகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here