நேபாள வெள்ளம்: அடையாளம் காண முடியாத உடல்களின் டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு

0
13

நே​பாளத்​தில் மீட்​கப்​பட்ட அடை​யாளம் காண முடியாத உடல்​களை அடக்​கம் செய்​வதற்கு முன்பு டிஎன்ஏ மாதிரி சேகரிக்​கப்​படு​வ​தாக அந்​நாட்டு பிரதமர் தெரி​வித்​துள்​ளார்.

நேபாளத்​தில் இமயமலைப் பகு​தி​யில் ஏற்​பட்ட பெரு​வெள்​ளத்​தில் காணா​மல் போன சுமார் 3,000 பேரைத் தேடும் பணி​கள் தொடர்ந்து நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில், பிரதமர் பாலேந்​திர ஷா மீட்பு மற்​றும் நிவாரணப் பணி​கள் குறித்த சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: மீட்​புப் பணி​யின்​போது ஏராள​மான உடல்​கள் மீட்​கப்​பட்டு வரு​கின்​றன.

இதில் குடும்​பத்​தின​ரால் அடை​யாளம் காணப்​பட்ட உடல்​கள் அவர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்டு வரு​கின்​றன.

அதே​நேரம் பல உடல்​கள் அடை​யாளம் காண முடி​யாத வகை​யில் சிதைந்துள்ளன. அந்த உடல்​களை நீண்ட நாட்​களுக்கு வைத்திருக்க முடி​யாது. எனவே, சட்​டப்​பூர்வ நடை​முறை​களுக்​குப் பிறகு அவை அடக்​கம் செய்​யப்​பட​வுள்​ளன.

உரிமை கோரப்​ப​டாத உடல்​களை அடக்​கம் செய்​வதற்கு முன்பு அரசு வழி​காட்​டு​தல்​கள் பின்​பற்​றப்​படும். குறிப்​பாக, அடை​யாளம் தெரி​யாத உடல்​களின் டிஎன்ஏ மாதிரி​கள் மற்​றும் பிற தகவல்​கள் அடக்​கம் செய்​வதற்கு முன்பு சேகரிக்​கப்​பட்டு பாது​காக்​கப்​படும். இது காணா​மல் போனவர்​களின் உறவினர்​கள், தங்​கள் அன்​புக்​குரிய​வர்​கள் உயிருடன் இருக்​கிறார்​களா என்​பதை உறுதிப்படுத்த உதவி​யாக இருக்​கும். இவ்​வாறு அவர்​ தெரிவித்தார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here