வெள்ள பாதிப்பு, மீட்பு நடவடிக்கை நிலவரம் என்ன? – நேபாள காவல் துறை விளக்கம்

0
18

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 289 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட குறைந்தது 826 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேபாள காவல் துறை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இன்று பிற்பகல் 1.30 மணி நிலவரப்படி கண்டெடுக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 289. இதில் ரசுவா பகுதியில் 17, நுவாகோட்டில் 12, தாடிங்கில் 27, சித்வானில் 108, கோர்க்காவில் 20, தனஹுனில் 9, நவல்ப்பரசாசியில் 15, தேசிய மாகாணம் மேற்கில் 15, தேசிய மாகாணம் கிழக்கில் 62 பேர் உயிரிழந்துள்ளனர். 66 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டிஆர்ஐ போதனா மருத்துவமனையில் இருந்து 26 பேர், மன்மோகன் மருத்துவமனையில் இருந்து 14 பேர் உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களில் 66 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உள்ளூர்வாசிகள், பாதுகாப்புப் படையினர், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட குறைந்தது 826 பேருடன் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்களில் 44 பேர் நேபாள ராணுவத்தைச் சேர்ந்தவர்கள். 28 பேர் நேபாள காவல் துறையையும், 13 பேர் நேபாள ஆயுத காவல் படையையும் சார்ந்தவர்கள். 644 சுற்றுலாப் பயணிகளில் 517 பேர் வெளிநாட்டினர். 127 பேர் நேபாளிகள்.

வெள்ள நீர் ரசுவா மாவட்டம் வழியாகவும் பிற மாவட்டங்கள் வழியாகவும் பாய்ந்து திரிசூலி மற்றும் நாராயணி நிதி படுகைகள் வழியாக கீழ்நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. இதனால், குடியிருப்புகள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு அமைப்புகளும் பாதுகாப்புப் படைகளும் தேடுதல், மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. உயிரிழந்தவர்கள் மற்றும் இன்னும் கண்டறியப்படாதவர்கள் குறித்த விவரங்களை அதிகாரிகள் தொகுத்து வருகின்றனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here