நட்பின் முக்கியத்துவம் சொல்லும் ‘முஸ்தபா முஸ்தபா’

0
176

சதீஷ் கதாநாயகனாக நடித்துள்ள டார்க் காமெடி படம் ‘முஸ்தபா முஸ்தபா’. இதில் சுரேஷ் ரவி, கருணாகரன், புகழ், மோனிகா, மானசா சவுத்ரி, ஐஸ்வர்யா தத்தா, பாவல் நவநீதன் என பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் பிரவீன் சரவணன் இயக்கியுள்ளார்.

மார்ச் 6-ல் வெளியாகும் இப்படம் பற்றி நடிகர் சதீஷ் கூறும்போது, “இது ஜாலியான படமாக இருக்கும். ‘முஸ்தபா முஸ்தபா’ என்றால் நமக்கு நட்பு பாடல் தான் ஞாபகம் வரும். அதை மனதில் கொண்டு நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி இந்தப் படத்தை வெளியிடுகிறது. ஆணும் பெண்ணும் சமமல்ல. ஆண்களை விட பெண்கள் உயரத்தில் உள்ளனர். பெண்கள் தெய்வத்துக்குச் சமம்.

அதனால், மது குடிப்பது தவறு. நான் என் வாழ்க்கையில் இதுவரை சிகரெட், மது தொட்டதில்லை. இதைப் பெருமைக்காகச் சொல்லவில்லை. நான் சொன்னதைக் கேட்டு நாலு பேர் அந்த எண்ணத்தைக் கைவிட்டால் மகிழ்வேன்” என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here