மெலோனிக்கு முகா பட்டு சால்வை, யுஏஇ தலைவருக்கு மாம்பழங்கள்: உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுகள்

0
19

ஐக்​கிய அரபு அமீரகம் (யுஏஇ), நெதர்​லாந்​து, சுவீடன், நார்​வே, இத்​தாலி ஆகிய 5 நாடு​களுக்​கான பயணத்தை பிரதமர் நரேந்​திர மோடி நிறைவு செய்​துள்​ளார்.

இந்​தப் பயணத்​தில் இந்​தி​யா​வின் பாரம்​பரி​யம், வேளாண்​மை, மற்​றும் கலாச்​சார முக்​கி​யத்​து​வம் வாய்ந்த பல்​வேறு பரிசுப் பொருட்​களை உலகத் தலை​வர்​களுக்கு அவர் வழங்​கி​னார்.

இத்​தாலி​யின் ரோம் நகருக்கு சென்​ற​போது, அந்​நாட்டு பிரதமர் ஜார்​ஜியா மெலோனிக்​கு, பிரத்​யேக​மாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட 2 பட்டு சால்​வை​களை (முகா பட்டு சால்​வை, ஷிருய் லில்லி பட்டு சால்​வை) மோடி பரி​சாக வழங்​கி​னார்.

அசாமின் ‘தங்​கப் பட்​டு’ என்று அழைக்​கப்​படும் முகா பட்​டு, பிரம்​மபுத்ரா பள்​ளத்​தாக்​கின் அரிய வகை கைத்​தறி ஜவுளி​யாகும். செயற்கை சாயங்​கள் ஏது​மின்​றி, அதன் இயற்​கை​யான தங்க நிறம், நீடித்து உழைக்​கும் தன்​மை, சூழலுக்கு பாதிப்​பில்லா தயாரிப்பு ஆகிய​வற்​றுக்​காக இது மிக​வும் மதிக்​கப்​படு​கிறது.

இத்​தாலிய அதிபர் செர்​ஜியோ மட்​டரெல்​லா​வுக்​கு, பாரம்​பரிய பளிங்கு வேலைப்​பாடு கொண்ட பெட்​டி​யுடன் இந்​திய இசை மேதைகளான பண்​டிட் பீம்​சென் ஜோஷி, எம்​.எஸ்​.சுப்​புலட்​சுமி ஆகியோரின் இசை குறுந்​தகடு​களை​யும் பிரதமர் மோடி பரி​சாக வழங்​கி​னார்.

ஐ.நா. சபை​யின் உணவு மற்​றும் வேளாண்மை அமைப்​பின் இயக்​குநர் ஜெனரல் கியூ டோங்​யு​விடம் இந்​தி​யா​வின் மிகச்​சிறந்த தானி​யங்​களின் தொகுப்பை பிரதமர் மோடி வழங்​கி​னார்.

இதில் கேரளா​ வின் பாலக்​காடு சிவப்பு அரிசி, மேற்கு வங்​கத்​தின் கோவிந்​தோ​போக் அரிசி, இந்​தோ-கங்கை சமவெளி​யின் பாஸ்​மதி அரிசி, அசாம் பிரம்​மபுத்ரா பள்​ளத்​தாக்​கின் ஜோஹா அரிசி, உ.பி.​யின் காலாநமக் அரிசி ஆகியவை இடம்​பெற்​றிருந்​தன.

நார்வே பட்டத்து இளவரசருக்கு வழங்கப்பட்ட கலம்காரி ஓவியம், ஐ.நா. அதிகாரிக்கு வழங்கப்பட்ட சிறுதானிய பிஸ்கட்.

பாரம்​பரிய தானி​யங்​களு​டன் சேர்த்​து, ஆரோக்​கிய​மான சிறு​தானிய ஸ்நாக்​ஸ்​களை கியூ டோங்​யுவுக்கு பிரதமர் மோடி வழங்​கி​னார். ஐக்​கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்​யானுக்கு குஜ​ராத்​தின் அரிய ஜவுளி பாரம்​பரிய​மான, ‘வாழ்​வின் மரம்’ வடிவத்தை கொண்ட ரோகன் ஓவி​யம் வழங்​கப்​பட்​டது.

மேலும், புவி​சார் குறி​யீடு பெற்ற கேசர் மாம்​பழங்​கள், மேகாலயா அன்​னாசிப் பழங்​கள் உள்​ளிட்ட பாரம்​பரிய இந்​திய விளைபொருட்​களும் வழங்​கப்​பட்​டன.

சுவீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்​டெர்​சனுக்கு கைவினைப் பொருளான சாந்​தி​நிகேதன் தூது​வர் பை மற்​றும் ரவீந்​திர​நாத் தாகூரின் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட படைப்​பு​களை பிரதமர் மோடி பரி​சாக வழங்​கி​னார்.

மேலும் மணிப்​பூரின் லோக்​டாக் தேநீரை​யும் அவர் வழங்​கி​னார். ரசாயனங்​கள் இல்​லாத தோட்​டங்​களில் பயி​ரிடப்​படும் இந்த தேநீர், வடகிழக்கு இந்​தி​யா​வின் தனித்​து​வ​மான சுற்​றுச்​சூழல் அமைப்​போடு நெருங்​கிய தொடர்​புடைய​வை.

சுவீடன் பிரதமருக்கு கலாச்​சார பரி​மாற்​றத்​தின் ஒரு பகு​தி​யாக ‘பஷ்மி​னா’ என்று அழைக்​கப்​படும் லடாக் தூய கம்​பளி சால்​வையை​யும் பிரதமர் மோடி பரி​சாக வழங்​கி​னார்.

இமயமலை​யின் கடுமை​யான சூழ்​நிலைகளைத் தாங்கி வாழும் சாங்​தாங்கி ஆடு​களிட​மிருந்து இந்த கம்​பளி பெறப்​படு​கிறது. நார்வே இளவரசர் ஹாகோனுக்கு சூரியன் மற்​றும் சந்​திரன் வடிவங்​கள் கொண்ட கலம்​காரி ஓவி​யத்தை பிரதமர் மோடி பரி​சாக வழங்​கி​னார். இது ஆந்​திரப் பிரதேசத்​தின் பழமை​யான ஜவுளி கலை வடிவ​மாகும்.

நார்வே ராணி சோன்​ஜாவுக்கு ஒடி​சா​வின் பழமை​யான கலை வடிவங்​களில் ஒன்​றான பனை ஓலை பட்​டசித்ரா வழங்​கப்​பட்​டது. நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோருக்கு சிக்​கிம் மாநிலத்​தின் ஆர்க்​கிட் ஓவி​யங்​கள் மற்​றும் ஆர்க்​கிட் பேப்​பர் வெயிட்​டு​கள் பரி​சாக வழங்​கப்​பட்​டன.

நெதர்​லாந்து பிரதமர் ராப் ஜெட்​ட​னுக்கு மீன் வடிவத்​தைக் கொண்ட மது​பானி ஓவி​யத்தை பிரதமர் மோடி பரி​சாக வழங்​கி​னார். நெதர்​லாந்து மன்​னர் வில்​லெம்​-அலெக்​சாண்​டருக்கு ஜெய்ப்​பூரின் நீல மண்​பாண்​டத்தை பரி​சாக வழங்​கி​னார்.

இது குவார்ட்ஸ் தூள், கண்​ணாடி ஆகிய​வற்​றி​லிருந்து தயாரிக்​கப்​படும் தனித்​து​வ​மான வடிவ​மைப்​பு​களுக்கு பெயர் பெற்ற ஒரு புவி​சார் குறி​யீடு பெற்ற கைவினைப் பொருளாகும். நெதர்​லாந்து ராணி மாக்​சி​மாவுக்கு ராஜஸ்​தானின் மீனா​காரி மற்​றும் குந்​தன் வேலைப்​பாடு கொண்ட கம்​மல்​கள் பரி​சாக வழங்​கப்​பட்​டன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here