மார்த்தாண்டம்: முந்திரி ஆலை முன் திடீர் முற்றுகை போராரட்டம்

0
275

மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக் கடைப்பகுதியான கோட்டகத்தில் தனியாருக்கு சொந்தமான பழைய முந்திரி தொழிற்சாலை உள்ளது. தற்போது முந்திரி தொழிற்சாலையை அப்பகுதியினர் மத கூடமாக மாற்றி திடீர் சர்ச்சையாக மாற்ற முயற்சித்தனர். இந்தச் செய்தி அறிந்த இந்து முன்னணி கிள்ளியூர் ஒன்றிய பொதுச் செயலாளர் செல்வின் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திடீர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இச்செய்தி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஜெபக்கூட்டம் நடத்த முயற்சி செய்தவர்களை கலைந்து செல்ல கூறினர்.

 அவர்கள் கலைந்துசெல்லாமல் அந்தப் பகுதியில் இருந்தனர். உடனடியாக இந்து முன்னணி செல்வின் தலைமையில் திடீர் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் முகுந்தன், வினுகுமார், செந்தில்குமார், தனிஷ் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவானது. போலீசார் இரண்டு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பகுதியில் ஜெபக்கூட்டம் நடத்த மாட்டோம் என எழுதி வாங்கினர். இதனை அடுத்து அந்தப் பகுதியில் இருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here