மார்த்தாண்டம்: கிறிஸ்தவ கல்லூரியில் வணிகவியல் விழா

0
261

மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் முதுகலை வணிகவியல் துறை மன்றவிழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஷீலா கிறிஸ்டி தலைமை தாங்கினார். முதுகலை வணிகவியல் துறை தலைவர் கிரிஸ்டல் பாப்பா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து பேசினார். 

சிறப்பு விருந்தினராக அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வணிகவியல் துறை தலைவர் முனைவர் ஆர் தர்ம ரஜினி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, இந்த கல்வி ஆண்டில் சிறப்பு மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். 

நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும், மாணவர்கள் தயாரித்த குறும்படமும் திரையிடப்பட்டது. விழாவில் துறை பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here