மார்த்தாண்டம்: பெட்டிக்கடையில் புகையிலை விற்ற 2 பேர் கைது

0
383

மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (48). இவர் மார்த்தாண்டம் சந்தை அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார். இவர் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து இன்று போலீசார் செல்வராஜின் கடையில் சோதனை நடத்தினர். 

மேலும் செல்வராஜின் வீட்டிலும் சோதனை நடத்திய போது அங்கு புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து தினமும் பெட்டிக்கடைக்கு கொண்டுசென்று விற்பனை செய்துவந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதற்குப் பின்னணியாக விரிகோடு பகுதியைச் சேர்ந்த ஜெகன் (45) என்பவர் கேரளாவில் இருந்து சட்டவிரோதமாக புகையிலை கடத்திவந்து செல்வராஜின் வீட்டில் பதுக்கிவைத்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து செல்வராஜ் மற்றும் ஜெகன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here