மணவாளக்குறிச்சி:  மாயமான ஐஆர்இஎல் தொழிலாளி சடலமாக மீட்பு

0
231

மணவாளக்குறிச்சி பகுதி சேர்ந்தவர் சுவாமி பெருமாள் (74) ஓய்வு பெற்ற ஐஆர்இஎல் தொழிலாளி. கடந்த 4ம் தேதி வங்கிக்கு சென்று பணம் எடுத்து விட்டு வருவதாக வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. நேற்று சேரமங்கலத்தில் ஒரு தென்னந்தோப்பில் சுவாமி பெருமாள் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்தில் பார்த்தபோது அருகில் விஷப் பாட்டில் கிடந்தது. அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வருகிறது. மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here