மகாவீர் ஜெயந்தி: ஏப்.10-ல் மதுக்கடைகள் மூடல்

0
418

மகாவீர் ஜெயந்தி வரும் 10-ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி சென்னை மாவட்டத்தில், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் மற்றும் தமிழ்நாடு மதுபானம் விதிகளின்கீழ் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதை சார்ந்த பார்கள், உரிமம் பெற்ற கிளப் பார்கள், ஓட்டல் பார்கள், மதுபான விற்பனையகங்கள், மதுபானக் கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.

மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. மீறி விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here