‘மதராஸி’ தோல்வி: ஏ.ஆர்.முருகதாஸ் மீது புகார்

0
110

‘மதராஸி’ படத்தின் தோல்வியை முன்வைத்து தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘மதராஸி’. கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் இப்படம் வெளியானது. ஆனால் இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. மேலும், படமும் எதிர்பார்த்த வசூலை பெறாமல் தோல்வியை தழுவியது.

இதனிடையே, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சங்கத்தில் ‘மதராஸி’ படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது புகார் அளித்துள்ளார். ‘மதராஸி’ படத்தினை ரூ.115 கோடியில் முடிப்பதாக கூறிவிட்டு, 170 கோடி வரை செலவாகிவிட்டதாகவும், இதற்கு ஏ.ஆர்.முருகதாஸ் சரியாக திட்டமிடாததே காரணம் என்று அப்புகாரில் கூறப்பட்டது. ஏனென்றால், இந்த சமயத்தில் ‘மதராஸி’ மற்றும் ‘சிக்கந்தர்’ என்று இரண்டு படங்களை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த புகாரை முன்வைத்து ஏ.ஆர்.முருகதாஸிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை சரிசெய்யும் விதமாக, ‘மதராஸி’ தயாரிப்பாளருக்கு ‘ரமணா 2’ படத்திற்கான தெலுங்கு கதையினை எழுதிக் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இதற்கு ‘மதராஸி’ தயாரிப்பாளரும் சம்மதம் தெரிவித்திருப்பதால் இப்புகார் முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here