ராஜமவுலி படத்தில் இணைகிறார் மாதவன்!

0
68

ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் நடித்த ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இதில் பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு சமீபத்தில் ஒடிசாவில் நடந்தது. படப்பிடிப்பில் மகேஷ்பாபு, பிருத்விராஜ் பங்கேற்ற காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தன. இந்தப் படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இதில் மாதவன் இணைய உள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

“இந்தப் படம், ‘இண்டியானா ஜோன்ஸ்’ போல உலக அளவிலான ஆக்‌ஷன் அட்வென்சர் படமாக இருக்கும்’ என்று ராஜமவுலி ஏற்கெனவே தெரிவித்திருந்தார். மகேஷ்பாபுவின் கேரக்டரை ஹனுமனை நினைவூட்டும் வகையில் வடிவமைத்துள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு கென்ய காடுகளில் நடக்க இருப்பதாகவும் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தெரிவித்திருந்தார். இந்தப் படத்துக்கு மரகதமணி இசை அமைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here