குறும்பனை: ரூ 12 லட்சம் மோசடி பெண் தூக்கிட்டு தற்கொலை

0
24

குறும்பனை பகுதியைச் சேர்ந்த 60 வயதான சோபை, தனது மகளின் திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்த ரூ. 12 லட்சத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கடன் கொடுத்தார். பணத்தை திரும்பக் கேட்டபோது அவர் கொடுக்க மறுத்ததால் மனமுடைந்த சோபை, நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here