குமரி: சுற்றுலாவை ஊக்குவிக்க வேண்டும்.. எம். பி கோரிக்கை

0
341

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்துள்ளார். அந்த தீர்மானத்தில் கூறியிருப்பதாவது: – கன்னியாகுமரி மாவட்டம் மழை, கடல், ஆறுகள், அருவிகள், வழிபாட்டுத்தலங்கள் என இயற்கை அழகு நிறைந்து காணப்பட்டாலும் இங்கு போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்ல சிரமப்படுகின்றனர். 

மேலும் உலக புகழ் வாய்ந்த விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை போன்ற இடங்கள் இங்கு இருந்தாலும் புதிய சாலை வசதிகள், ரயில் வசதிகள் மற்றும் விமான நிலையம் இல்லாத காரணத்தால் மிகவும் ஆற்றல் வளம் மிக்க கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலாத் துறையில் போதிய வளர்ச்சியை எட்டவில்லை. 

குமரி மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய அரசு இதில் அதிக கவனம் செலுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தை உலக சுற்றுலா தலங்களின் வரைபடத்தில் கொண்டு சேர்க்க போதிய நிதியினை ஒதுக்க வேண்டும். இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வரும் இந்த காலகட்டத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் இந்தியாவின் சுற்றுலாவையும் மேம்படுத்த உதவும் என கூறியுள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here