கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்பத்துக்கோணம் பகுதியில் மனித பாதுகாப்பு கழகம் சார்பாக பொங்கல் விழா பொதுக்கூட்டம் நேற்று (ஜன.14) நடைபெற்றது. மனித பாதுகாப்பு கழகம் நிறுவனத் தலைவர் டாக்டர். ஜெயமோகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரம் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், வேட்டி, சேலையை ம.பா.க பொதுச் செயலாளர் வழக்கறிஞர் உஷா வழங்கினார்.