இரணியல்: சாலை சீரமைக்க கோரி எம்எல்ஏ ஆர்ப்பாட்டம்

0
64

பரிசேரி – திங்கள் நகர் மாநில நெடுஞ்சாலையை செப்பனிடும் கேட்டு துள்ளிவிளை ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் கண்டனவிளை குருசடி சந்திப்பில் நடைபெற்றது. ஊராட்சி காங்கிரஸ் தலைவர் பின்வாஷிங்டன் தலைமை வகித்தார். செயல் தலைவர் பிரபு ரீகன் முன்னிலை வகித்தார். குளச்சல் எம்.எல்.ஏ பிரின்ஸ் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி. உதயம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினார்கள். 

ஆர்ப்பாட்டத்தில் பேசிய பிரின்ஸ் எம்.எல்.ஏ: – இரணியல் பகுதியில் சாலை விரிவுபடுத்தக் கூடாது என ஒரு கூட்டம் தடை உத்தரவு வாங்கியிருக்கிறார்கள். அந்த தடையை விலக்க நீதிமன்றத்தை நாடினால் மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. தற்போது சட்டசபையில் இது தொடர்பாக பேசி தமிழக முதல்வர் உடனடியாக இந்த சாலையை சீரமைப்பு பணி தொடங்குவதாக அறிவித்துள்ளார். தற்போது இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. 

எனவே உடனடியாக 25 நாட்களில் சாலை சீரமைப்பு பணி தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான காங்கிரஸ்காரர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here