குமரி: 20 ஆண்டுகளுக்குப் பின்பு சந்தித்த முன்னாள் மாணவர்கள்.

0
276

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள புனித அலோசியஸ் மேல்நிலை பள்ளியில் 2006 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள், 20 வருடங்களுக்குப் பிறகு நேற்று ஒன்றிணைந்தனர். இந்த விழாவில் அவர்களுக்குப் பாடம் எடுத்த ஆசிரியர்களும், பள்ளியின் தற்போதைய தாளாளரும் கலந்துகொண்டனர். முன்னாள் மாணவர்களுக்குப் பாடம் எடுத்த ஆசிரியர்களுக்குப் பொன்னாடை மற்றும் நினைவு கேடயம் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் மாணவர்களின் குழந்தைகள் நடன நிகழ்ச்சி மற்றும் நினைவுகூர்ந்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாணவர்கள் வகுப்பறைக்குள் சென்று வருகைப் பதிவேட்டை எடுத்து, 20 வருடங்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற அனுபவத்தைப் பெற்றனர். பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசித்து வந்த மாணவர்கள் ஒன்றிணைந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here