குழித்துறை: நன்றி அறிவிப்பு கூட்டமாகமாறிய உண்ணாவிரத போராட்டம்

0
256

குழித்துறை அருகே மருதன்கோடு பகுதியில் இருந்த மகாத்மா காந்தி சிலை கடந்த மாதம் இரவில் மர்ம ஆசாமிகளால்  சேதப்படுத்தப்பட்டது. இதில் குற்றவாளியை போலீசார் கைது செய்ய முடியாமல் திணறி வந்தனர். இதனை தொடர்ந்து மகாத்மா காந்தி சிலையை சேதப் படுத்திய மர்ம நபர்களை  கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கழுவன்திட்டையில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக காங்கிரஸ் கட்சியினர் நேற்று (அக்.,10) அங்கு கூடினர். அப்போது அங்கு வந்த மார்த்தாண்டம் போலீஸ் துணை சூப்பிரண்ட் நல்லசிவம் காந்தி சிலையை செய்த படுத்திய கழுவந்திட்டை காலனி சேர்ந்த ராஜா சிங் என்பவரை கைது செய்திருப்பதாக போராட்டகார்களிடம் தெரிவித்தார்.  

இதையடுத்து உண்ணாவிரத போராட்டம் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டமாக மாற்றி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமை தாங்கினார். மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here