கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா

0
277

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தின் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேள தாளங்கள் முழங்க கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அமைதி புறாக்கள் பறக்க விடப்பட்டன. கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் முதல் நாள் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருப்பலி, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். திருவிழாவின் இறுதி நாளான டிசம்பர் 3 அன்று தேர் பவனி நடைபெறுகிறது. இந்த ஆண்டு தேர் பவனி அன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here