கொல்லங்கோடு அருகே பன விளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (44). இவர் கிராத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாரில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு கொல்லங்கோடு வெட்டுக்காடு பகுதி சேர்ந்த கோலிங்க்ஸ் (25) என்பவர் மது குடித்தார். மது குடித்துவிட்டு ஸ்நாக்ஸ் கேட்டார். ஸ்நாக்ஸ் கொடுப்பதற்கு தாமதமானதால் ஆத்திரமடைந்த வாலிபர் மேஜை மீது இருந்த இரும்பு வாளியை எடுத்து ஸ்ரீகுமாரை தாக்கினார். இதில் காயமடைந்தவரை குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் கோலிங்க்ஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.