கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ்குமார் நேற்று ( 9-ம் தேதி) சட்டசபையில் பேசியதாவது: – கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, கொல்லங்கோடு நகராட்சி பகுதியில் எட்டரை கிலோ மீட்டர் தொலைவிற்கு ஏவிஎம் கால்வாய் செல்கிறது. அந்த கால்வாய் பகுதியில் இரையுமன் துறை கிராமமும் மற்றொருபுறம் கலிங்கராஜபுரம் கிராமங்களும் இருக்கின்றன.
நீண்ட காலமாக இடர்பாடுகள் ஏற்படும் நேரங்களில் இரையுமன் துறை மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டிய சூழலில் உள்ளனர். எனவே இரையுமன் துறையையும், வைக்கல்லூர் கிராமத்தையும் இணைக்கக்கூடிய ஒரு உயர்மட்ட இணைப்பு பாலத்தை அமைத்து தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் நேரு இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்கவும், நிதி நிலைக்கேற்ப அதை செய்து தருவதற்கும் முயற்சி எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.