திருவட்டாறு அருகே உள்ள கேசவபுரம் ஆனபூந்திக்குளம் குளத்து பத்திரகாளியம்மன், பூதத்தான் இசக்கியம்மன், சுடலை மாடன், நாகராஜா கோவிலில் நேற்று வைகாசி பவுர்ணமி பூஜை நடைபெற்றது. இதில் அபிஷேகம், புஷ்பாபிஷேகம், அலங்காரதீபாராதனை, நிவேத்யம் ஆகியவை நடந்தன. பக்தர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.















