கருங்கல்: சாலையில் வாலிபர்கள் தாக்குதல்; கண்டு கொள்ளாத போலீஸ்

0
523

கருங்கல் அருகே மூசாரி என்ற பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பகுதி வழியாக நேற்று (மார்ச் 3) மாலை பள்ளியாடி பகுதியில் இருந்து 2 வாலிபர்கள் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். 

பள்ளி அருகே வந்தபோது பின்னால் துரத்திக்கொண்டு வந்த கும்பல் ஒன்று சொகுசுகாரில் வந்து பைக்கில் சென்ற வாலிபர்களை வழிமறித்தனர். அப்போது பைக்கில் இருந்து இரண்டு வாலிபர்களும் கீழே விழுந்தனர். உடனே காரில் இருந்து இறங்கிய நான்கு பேர் கும்பல் சரமாரியாக இரண்டு பேரையும் அடித்து உதைத்தனர். 

சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் திரண்டனர். உடனே பைக்கில் இருந்த சாவியை எடுத்துக்கொண்டு கும்பல் காரில் ஏறி தப்பிச் சென்றனர். இதில் ஒருவர் பொதுமக்களிடம் சிக்கினார். விசாரணையில் பள்ளியாடி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பிடிபட்ட நபர் அவர்களை தாக்கவில்லை என்றும் கூறினார்.

 இதுகுறித்து கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் ஒரு மணி நேரம் ஆகியும் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த நிலையில் திடீரென ஒரு நபர் பைக்கில் வந்து எடுத்துச் சென்ற பைக் சாவியை அங்கு வீசிவிட்டுச் சென்று விட்டார். அடிவாங்கிய நபர்கள் நொந்துபடி அங்கிருந்து சென்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here