பாலூர் கோட்டவிளை பகுதியைச் சேர்ந்த 51 வயதான தொழிலாளி மோகன்தாஸ், குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கால்வாய் கரையில் அமர்ந்திருந்தபோது தவறி கால்வாயில் விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.















