கருங்கல் ஆர்.சி தெருவைச் சேர்ந்த மீன் தொழிலாளி ஆண்டனி என்பவரின் மகள் ஆன்றோ ரினா (18), திருச்சியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறைக்கு ஊர் திரும்பிய மாணவி நேற்று முன்தினம் இரவு முதல் காணாமல் போனார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், தந்தை ஆண்டனி கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.















