முள்ளங்கினாவிளைப் பகுதியை சேர்ந்தவர் பிரபின் மனைவி ஷீலா ஏஞ்சல் (39) பிரவீனுக்கு பழக்கமான ஒருவர் வியட்நாம் நாட்டுக்கு அனுப்புவதாக கூறியதால் இருமுறையாக ரூ. 18 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் விசா ஏற்பாடு செய்யாமல், சுற்றுலா விசாவில் செல்ல கூறியுள்ளார். இதையடுத்து பணத்தை திருப்பி கேட்ட போது அந்த நபர் பணத்தை திருப்பி தர முடியாது என கூறியதால் ஷீலா ஏஞ்சல் கருங்கல் காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் தொடர்பு கொண்டு பேசிய போது நான் குமரி மாவட்ட பிஆர்ஓ எனக் கூறி அந்த நபர் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தார். கருங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.