கன்னியாகுமரி: மளிகை கடைக்காரரிடம் ரூ. 2 லட்சம் மோசடி

0
782

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 44). இவர் கோட்டார் பஜாரில் பலசரக்கு மற்றும் கால்நடைகளுக்கான உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கேரள மாநிலம் பாலக்காடு சந்தரநகரை சேர்ந்த கார்த்திக் பாபு (42) என்பவர் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை வாங்கினார். பின்னர் அதற்கான தொகை ரூ. 1 லட்சத்து 92 ஆயிரம் கொடுக்காமல் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து சுப்பிரமணியன் கோட்டார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கார்த்திக் பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here