ரூ.1 கோடி பரிசு பட்டியலில் இருந்து கபடி வீராங்கனையின் பெயர் நீக்கம்: ரிது நேகிக்கு நேர்ந்த சோகம்

0
30

ஜப்​பானில் சமீபத்​தில் முடிவடைந்த ஆசிய விளை​யாட்​டுப் போட்​டி​யில் கபடி​யில் இந்​திய மகளிர் அணி தங்​கப் பதக்​கம் வென்​றிருந்​தது. இந்த அணி​யில் நட்​சத்​திர வீராங்​க​னை​யும் முன்​னாள் கேப்​டனுமான இமாச்​சல் பிரதேசத்தை சேர்ந்த ரிது நேகியும் இடம் பெற்​றிருந்​தார்.

இந்​நிலை​யில் ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் பதக்​கம் வென்ற இமாச்​சல் பிரதேசத்தை சேர்ந்த வீரர், வீராங்​க​னை​களுக்கு அம்​மாநில அரசு ஊக்​கத் தொகையை அறி​வித்​தது. இதில் ரூ.1 கோடிக்​கான பரிசு பெறு​வோர் பட்டியலில் ரிது நேகி இடம் பெற்​றிருந்​தார். ஆனால் கடைசி நேரத்​தில் அவரது பெயர் நீக்​கப்​பட்​டது.

அர்​ஜுனா விருது பெற்​றுள்ள ரிது நேகி, இமாச்​சலப் பிரதேசத்​தின் சிர்​மோர் மாவட்​டத்​தில் உள்ள ஷில்லை பகு​தி​யைச் சேர்ந்​தவர். இவர் திரு​மண​மாகி ஹரி​யாணா மாநிலம் பானிபட்​டில் வசித்து வரு​கிறார்.

கடந்த அக்​டோபர் 5-ம் தேதி, ஆசிய விளை​யாட்​டுப் போட்​டி​யில் கபடி​யில் தங்​கம் வென்ற இந்​திய மகளிர் அணி​யில் இடம்​பெற்ற இமாச்​சலப் பிரதேசத்​தைச் சேர்ந்த புஷ்பா ராணா, ஜோதி தாக்​குர், பவ்னா தாக்​குர் ஆகிய மூன்று வீராங்​க​னை​களுக்​கும், இந்​திய மகளிர் கிரிக்​கெட் அணி​யின் வீராங்​கனை ரேணுகா தாக்​குருக்​கும் தலா ரூ.1 கோடி ரொக்​கப் பரிசு வழங்​கப்​படும் என்று மாநில முதல்​வர் சுக்​விந்​தர் சிங் சுகு அறி​வித்​திருந்​தார். ஆனால், இந்​தப் பட்​டியலில் இடம்​பெற்​றிருந்த ரிது நேகி​யின் பெயர் கடைசி நேரத்​தில் நீக்​கப்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது.

இது குறித்து ரிது நேகி கூறும்​போது, “ஒரு வாரத்​துக்கு முன்​புவரை நான் இமாச்​சலப் பிரதேசத்​தின் மகளாகவே இருந்​தேன். முதல்​வர்​கூட எனக்கு வாழ்த்து தெரி​வித்து முகநூலில் பதி​விட்​டிருந்​தார். ஆனால், 2 நாட்​களுக்கு முன்பு திடீரென என்ன மாறியது என்று புரிய​வில்​லை.

இந்​திய ரயில்​வே​யில் பணி​யாற்​றி​னாலும், உள்​நாட்​டுப் போட்​டிகளில் இமாச்​சலப் பிரதேசத்​துக்​காகவே விளை​யாடி வரு​கிறேன். இமாச்​சலப் பிரதேச அரசு ஏன் இவ்​வாறு நடந்​து​கொள்​கிறது? என்று தெரிய​வில்​லை” என்​றார்.

இமாச்​சலப் பிரதேச விளை​யாட்​டுத் துறை அமைச்​சர் யத்​வீந்​தர் கோமா கூறும்​போது, ரிது நேகி​யின் பெயர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்​டதற்​கான காரணம் தனக்​குத் தெரி​யாது. இதுதொடர்​பான கோப்​புகளை ஆய்​வு செய்​து, முதல்​வருடன்​ ஆலோ​சனை நடத்​து​வேன்​” என்​றார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here