புளோரிடாவில் ஜெட் விமான விபத்து: 9 பேர் உயிரிழப்பு

0
11

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சிறிய ரக ஜெட் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது. இந்த விபத்து காரணமாக அந்த விமானத்தில் பயணித்த 9 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

இந்திய நேரப்படி நவ.1-ம் தேதி இரவு 11.20 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல். விபத்தில் சிக்கிய விமானம் டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டினில் இருந்து பஹாமாஸ் சென்றுள்ளது. அப்போதுதான் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டிருப்பதாக அமெரிக்க அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

ஆஸ்டினில் இருந்து புறப்பட்ட ‘லியர்ஜெட் 60’ ரகத்தை சேர்ந்த விமானம் தான் விபத்தில் சிக்கியது. புளோரிடாவின் தெற்கு பகுதிக்கு அருகே கட்டுப்பாட்டை இழந்த விமானம் சாலையில் விழுந்து வெடித்தது. அந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் பதிவான நிலையில், அதை காணும் பார்வையாளர்கள் நெஞ்சங்களை பதைபதைக்க செய்யும் வகையில் உள்ளது.

விபத்தில் சிக்கிய விமானம் சாலையில் விழுந்த அடுத்த சில விநாடிகளில் தீப்பிழம்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் பல்வேறு துறைகளின் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விபத்தில் சிக்கிய விமானம் தனியாருக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. இருப்பினும் அதில் பயணித்தவர்கள் யார் என்ற விவரம் பகிரப்படவில்லை.

விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சாரமும் தடை செய்யப்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

விமானியின் ‘மே டே’ அழைப்பு

விமானம் கட்டுப்பாட்டை இழந்து நிமிடத்துக்கு 10,000 முதல் 20,000 அடி வரையில் கீழ் நோக்கி இறங்குவதாக விபத்தில் சிக்கிய விமானி, விமான போக்குவரத்து கட்டளை மையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு உதவ கட்டளை மைய அதிகாரிகள் முயன்ற நிலையில், ‘விமானம் தரையில் விழ உள்ளது’ என்று விமானி கூறியுள்ளார். அதன் பின்னர் இந்த விபத்து ஏற்பட்டது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here