13 ஆண்டுகள் இந்திய கலாச்சாரம் படித்த ஜப்பானிய பெண் – கங்கையில் முதல்முறையாக புனித நீராடல்

0
16

கடந்த 13 ஆண்​டு​களாக இந்தி மொழியை​யும் இந்திய கலாச்சாரத்​தை​யும் கற்​று​வந்த ஜப்பானிய இணை​யதள பெண் பிரபலம், ஹரித்​வாரில் உள்ள கங்கை நதி​யில் தனது முதல் புனித நீராடலை மேற்​கொண்டு நெகிழ்ச்​சி​யடைந்​துள்​ளார்.

இந்​தி​யக் கலாச்​சா​ரத்​தை​யும் ஆன்​மிகத்​தை​யும் அறிந்துகொள்வதில் வெளி​நாட்​டுப் பயணி​களுக்கு எப்​போதும் தனி ஆர்வம் உண்​டு. குறிப்​பாக வாராணசி, ரிஷிகேஷ் மற்​றும் ஹரித்​வார் போன்ற புனிதத் தலங்​களை நோக்கி அவர்​கள் பெருமள​வில் படையெடுத்து வரு​கின்​றனர்.

அந்த வகை​யில், கடந்த 13 ஆண்​டு​களாக இந்தி மொழியை​யும் இந்​திய கலாச்​சா​ரத்​தை​யும் கற்​று​வந்த மாயோ ஜப்பான் என்ற ஜப்​பானிய இணை​யதள பெண் பிரபலம், சமீபத்​தில் இந்தியாவுக்குப் பயணம் மேற்​கொண்டு ஹரித்​வாரில் உள்ள கங்கை நதி​யில் தனது முதல் புனித நீராடலை வெற்​றிகர​மாக நிறைவு செய்துள்ளார்.

பாரம்​பரிய இந்​திய உடை​யில் கங்​கைக்​கரைக்கு வந்த அவர் நீராடும் வீடியோவை இணை​யத்​தில் பகிர்ந்து, “13 ஆண்டு கால கற்​றலுக்​குப் பிறகு இறு​தி​யாக கங்​கை​யில் புனித நீராடி​விட்​டேன்; என் வாழ்க்​கை​யில் எதிர்​பா​ராத அழகான பயணங்​களை சாத்தியமாக்​கிய இந்​தி​யா​வுக்கு நன்​றி” எனப் பதி​விட்​டுள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here