இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

0
19

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல் அரசின் வீரதீரச் செயல் விருது ஸ்மித் மச்​சா​ருக்கு வழங்​கப்​பட​வுள்​ளது. இதற்​கான அறிவிப்பை இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்​ஸாக் வெளியிட்டுள்ளார்.

ஃபிளை து​பாய் விமானத்தையும் பயணிகளையும் காப்பாற்​றிய 6 பேருக்கு டெல் அவிவ் நகரிலுள்ள அதிபர் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்ற விழா​வில் விருது வழங்​கப்​பட்​டது. அப்​போது அதிபர் ஐசக் ஹெர்​சாக்​,‘‘இஸ்​ரேலின் உயரிய வீர​தீரச் செயல் விருது விரைவில் பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு வழங்​கப்​படும். அவர் விரைந்து குணமடைய நான் வாழ்த்​துகிறேன். அவர் குணமடைந்து வீடு திரும்​பியதும் அவருக்​கான விருது வழங்கப்படும்​” என்​றார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here