அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கொல்ல ஈரான் புது திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்காவுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
இதற்கு வலு சேர்ப்பது போல், ஈரானில் அயத்துல்லா அலி கமேனி இறுதிச் சடங்கு ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் நாங்கள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை கொல்வோம் என்ற பேனரை ஏந்தியபடி சென்றனர். இந்நிலையில் துருக்கியில் நேட்டோ மாநாட்டில் பங்கேற்ற அதிபர் ட்ரம்ப், கத்தார் பரிசளித்த புதிய விமானத்துக்கு பதில், பழைய ஏர்போர்ஸ் ஒன்விமானத்தில் அதிபர் ட்ரம்ப் சென்றார். இங்கிலாந்தின் சப்போல்க் நகரில் உள்ள அமெரிக்க விமானப்படைத்தளம் சென்றபின் மீண்டும் புதிய விமானத்தில் ஏறி அமெரிக்கா சென்றார்.
வால் ஸ்ட்ரீட் இதழில் வெளியான செய்தியில், “ஈரான் ராணுவ தளபதி சுலைமானி 2020-ம் ஆண்டு கொல்லப்பட்டது முதல் அதிபர் ட்ரம்ப்பை கொலை செய்வோம் என ஈரான் கூறிவருகிறது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் கூறுகையில், ‘‘துருக்கியில் இருந்து இங்கிலாந்து செல்ல ஏர்போர்ஸ் ஒன் விமானத்தை பயன்படுத்துவேன். அங்குள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் நிற்கும் புதிய விமானத்தை அங்குள்ள வீரர்கள் பார்வையிடுவர்” என தெரிவித்தார்.















